தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Montag, 17. Oktober 2016

கார்த்திகை விரதம்


தமிழ் கடவுள் முருகன் சரவணபவ


கார்த்திகை விரதம் சைவத்தமிழ் கடவுளான முருகப் பெருமானை வேண்டி அவரை மனதில் நினைத்து கார்த்திகை நட்சத்திர தினமன்று ஒவ்வொரு மாதமும் விரதம் இருப்பர்.
பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான்   நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார் என்று சொல்கிறது புராணம். 
 சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி,  சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப் படுகிறார்.

சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து கார்த்திகை நட்சத்திரமாக வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கி, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் சகல பாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார்.
  கார்த்திகை மாதத்தில் தொடக்கி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கார்த்திகை
 நட்சத்திர நாளன்று பன்னிரண்டு ஆண்டுகள் விரதமிருத்தல் வேண்டும்.
  
 கார்த்திகை மாதத்தில் வரும் பரணி
 நட்சத்திரத்தன்று பகலில் உணவு உண்டுஇரவில் உண்ணாமல்,விரதத்தைத் தொடங்கவேண்டும்
மறுநாள் கார்த்திகை நட்சத்திரத்தன்று  நீராடி முருகனை வழிபட்டுஅன்று முழுவதும்விரதமிருந்துதியானம்பாராயணம்கோவில் வழிபாடு  செய்ய வேண்டும்பகலிலும்இரவிலும் உறங்கக் கூடாது.மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் நீராடிமுருகனை வழிபட்டு  சிறிதளவு  உணவு உண்ணலாம்.  அத்தோடு விரதமும் நிறைவு பெறும்.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
           ஆறுமுகம் ஆறுமுகம்                             என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
           யார்கள்பத மேதுணைய                தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
           ஈசஎன மானமுன                         தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
           யேவர்புகழ் வார்மறையு           மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
           நீலமயில் வாகவுமை                          தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
           நீடுதனி வேல்வடும                        டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
           தேவர்துணை வாசிகரி                    அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
           தேவர்வர தாமுருக                             தம்பிரானே.
                                                                                         -        பழநி




Keine Kommentare:

Kommentar veröffentlichen