பல்லவி
காலை தூக்கி நின்று ஆடும்
தெய்வமே என்னை கை தூக்கி ஆள் தெய்வமே
அனுபல்லவி
வேலை தூக்கும் பிள்ளை தனை பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன் அம்பலத்தில் ஒரு
சரணம் 1
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கதித்த சடைமேல் தூக்கி
இங்கும் அங்குமாய் தேடி இருவர் கண்டறியாத
சரணம்2
நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க
முந்து வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க
Keine Kommentare:
Kommentar veröffentlichen