தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Freitag, 20. Januar 2017

பாரதி பாடிய முருகா


                                 முருகா!-முருகா!-முருகா!       
முருகா!-முருகா!-முருகா!
முருகா!-முருகா!-முருகா!
வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய்ந லமும் தகவும் புகழும்
தவமும்தி றமும் தனமும் கனமும்
                                                                (முருகா)
அடியார்ப லரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே!
                                                                                                 (முருகா)
சுருதிப்பொ ருளே,வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக்க ருதிக் கவலைப் படுவார்
கவலைக்க டலைக் கடியும் வடிவேல்
                                                                (முருகா) 
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம், சரணம்
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும்சு டர்வே லவனே, சரணம்!
                                                                (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகியதாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவிமீ தருள்வாய்
                                                                (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில்வ ளருங் கனலே!
தருவாய்தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்!
முருகா!-முருகா!-முருகா!
முருகா!-முருகா!-முருகா!
முருகா!-முருகா!-முருகா!
                        முருகா!-முருகா!-முருகா!                    ---பாரதியார்


Keine Kommentare:

Kommentar veröffentlichen