தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 7. Mai 2017

சித்திராப் பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி விரதம்
பூரணை விரதம் ஒரு பிதிர் விரதமாகும். சோதிடர்கள் சந்திரனை மாதுருகாரன் என்பர். பூரணை விரதம் சந்திரனைச் சார்ந்தது. தாயாரை இழந்தோரால் பூரணை அனுஷ்டிக்கப் படுகிறது.
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தோடு சந்திரன் நிற்கும் காலமாகும். அச் சமயம்  சூரியன் மேட இராசியில் நிக்கிறது. சந்திரன் சித்திரையோடு கூடி சித்திரைக்குரிய துலாராசியில் நிக்கிறது. மேடத்தில் இருந்து துலாம் ஏழாம் இடம் ஆனதால் பூமிக்கு ஏழாம் பாகையில் நின்ற சந்திரன் முழு வலிமை பெறுகிறது. முழு வலிமையும் சித்திரையில் கிரகணத்தோடு கூடிப் பூமிக்கு சித்திரை பௌர்ணமி அன்று தருகிறது. இந்த நாள் விஷேடமாக இருத்தலால் சித்திரை பௌர்ணமி முக்கியமானதால் விரதமிருத்தல் சிறப்பானது.
இந்நாளில் இந்திரன் தன் தீவினைகள் அகல சிவனை வணங்கி வேண்டிக்கொண்டான். அப்போது சிவன் ருதுக்களில் சிறந்த வசந்த ருதுவும், மாதங்களில் சிறந்த சித்திரை மாதமும், நட்சத்திரங்களில்  சிறந்த சித்திரை நட்சத்திரமும், திதிகளில் சிறந்த பௌர்ணமி திதியும் கூடும் இந்நாளில் நம்மைப் பூஜித்தால் 365நாட்களும் பூஜை செய்த பலன் கிடைக்கும் என அருளினார். இதன்படி இந்திரனும் பூஜித்து வரலானான்.
சித்திரை பௌர்ணமி விரதம் நம்மை பாவகாரியங்களில் இருந்து விலக்கி புண்ணிய சீலர்களாக ஆக்குவதர்க்கான பக்குவத்தை அளிக்கிறது. எனவே சித்திரை பௌர்ணமி தினத்தையும் அதன் தார்பரியங்களையும் தெரிந்து கொண்டு  இப் புண்ணிய தினத்தில்  உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பதால் இறந்த தாயாரின் ஆத்மா நற்கதி அடைகின்றது. அத்துடன் இக்காலத்தில் சிவனை தியானித்து வழிபடுபவர்கள் நற்பேறு எய்துவர் எனக் கூறப்படுகிறது.


Freitag, 28. April 2017

அழகான வடிவேலா


அரகரோகரா அரகரகரோகரா
அரகரோகரா அரகரகரோகரா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
மலைவேலா வடிவேலா
என் விழிதேடும் ஒளியாக வாரயோ மணிவேலா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
விதிகளில் உறங்கிடும் உயிரினை அறிந்தவன்
துயரத்தில் இவள் மனம் துடிப்பதை அறிவாய்
கனவுகள் ஒருபுறம் நினைவுகள் ஒருபுறம்
அலைவரும் மனதுக்கு அருள் புரிவாய்
அருள்வேலா அணிவேலா
கலங்கிடும் மனமதில் கவலைகள் கலைந்திட
உனஇரு திருவடி அடைக்கலம் தருவாய்
சுடும் வேல் தகிர்திடும் வழிகளை கடந்திட
சுடர் விடு நிழல் என துணை வருவாய்
மலைவேலா கதிர்வேலா

நன்றி - மௌனராகம் தொடர்





Mittwoch, 26. April 2017

ஓம் ஸ்ரீ ஜெய சக்தி

ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி - ஓம் ஸ்ரீ
ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய  என தினம் பாடி பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியை தா.
                                                   ----- -----(ஓம் ஸ்ரீ
திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவை யெல்லாம் அடைய  - அம்மம்மா  
தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாடி உருகிட
பணிப்பாய் அன்பில் எமை    
                                         ------------- - (ஓம் ஸ்ரீ
இரண்டுகள் போக மூன்றுகள் அகல
ஈஸ்வரி வரம் அருள்வாய் - அம்மம்மா  
ஈஸ்வரி வரம் அருள்வாய்
கரங்குவித்தோம் இனி காலை விடோமடி
கருணையுடன் அணைப்பாய்  
                                           --------------- (ஓம் ஸ்ரீ
காசினில் எங்கும் வேற்றுமை போக
கருத்தினில் அன்பருள்வாய் - அம்மம்மா 
கருத்தினில் அன்பருள்வாய்
தேஜசுடன் வாழ காட்டடி காட்சி
தேவி உன் அடைக்கலமே
                                                   -------------(ஓம் ஸ்ரீ
நமஸ்காரம் இருவினை கரத்தினில் -  ஞான  
நல்லொளி தீபம் வைத்து
ஞான   நல்லொளி தீபம் வைத்து
 நமஸ்காரம் செய்து ஆரத்தி செய்தோம்
ஞாலத்துக்கு அமைதியை தா.  
                                                  --------------(ஓம் ஸ்ரீ
 ஓம் கணபதி சாய் ஷண்முக நாதா 
ஓம் த்ரிகுண தீதா கிருஷ்ணா 
ஓம் த்ரிகுண தீதா க்ருஷ்ணா
ஸ்ரீ ஹரி ஓம் த்ரிகுண  தீதா கிருஷ்ணா,
ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ சம்போ 
ஓம் ஜய ஜகத் ஜனனி  
                                           -----------------(ஓம் ஸ்ரீ


Donnerstag, 13. April 2017

சித்திரை வருடப் பிறப்பு

சித்திரை வருடப்பிறப்பு
சித்திரை மாதம் இளவேனில் முதல்  மாதமாகும். அக் காலத்தில் இராசிகளில் முதலாவதான மேட இராசியிலே சூரியன் பிரவேசிக்கின்றார். அவ் வேளையில் தமிழ்ப்புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாடப்படுகின்றது.
சித்திரைப் புத்தாண்டு பிறப்பு தினத்தில் பல வகையான மலர்கள் (தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ), இலைகள் (துளசி, வில்வம்), தளைகள், அறுகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி,  பால், கோசலம், கோமயம், கோரோசனை, பச்சைக்  கற்பூரம்,   ஆகியவற்றையும் சேர்த்து அவிக்கின்ற விசேட நீர்  மருத்துநீர் என ஆலயங்களில் வழங்கப்படும். அதனை மக்கள் தலைக்கு தேய்த்து நீராடி புதிய ஆடை அணிவர். ஆலய தரிசனம் செய்து பெற்றோரை வணங்கி ஆசி பெறுவார். பின்னர் உற்றார் உறவினருடன் விஷேடமாக சமைக்கப்பட்ட உணவு உண்டு மகிழ்வர்.
புத்தாண்டு தினத்தில் அந்த ஆண்டு பலனை வாசிப்பதும் கேட்பதும் வழக்கமாகும். குறித்த கைவிசேட சுபநேரத்தில் கைவிசேடம் பரிமாறுவதன் மூலம் அவ் ஆண்டில் பணப்பெருக்கம் உண்டாகும் என்று சைவர்கள் நம்புகின்றனர்.
இயற்கையில் நடைபெறும் மாற்றங்கள் யாவும் சூரியனின் நிலையை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்படுகின்றன. அன்றியும் சூரியன் உதிப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, வீடு, வாசல் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டு அன்று சூரியனுக்கு பொங்கிப் படைக்கும் வழக்கம் நிலவி வருகின்றது.

Sonntag, 9. April 2017

பங்குனி உத்திரம்

                    பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் கூடிய பௌர்ணமி தினத்தில் இறைவன், இறைவியைத் திருமணம் செய்த நாளாகப் போற்றப்படுகின்றது. இத் தினத்தில் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்தார். முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்தார். இராமர் சீதையை மணமுடித்தார். திருவரங்கநாதர் ஆண்டாளை திருமணம் செய்தார்.  திருபாற்கடலில் இருந்து செல்வத்தை தருகின்ற இலட்சுமிதேவி வெளிப்பட்ட நாளும் பங்குனி உத்திரமாகும். இதனால் இவ் விரதம் கல்யாண விரதம் என அழைக்கப்படும். சிவன், முருகன், பெருமாள் ஆலயங்களில் தெய்வங்களுக்கு திருமண விழா நடைபெறும். பங்குனி உத்தரத்தில் ஐயப்பன் அவதரித்ததால் ஐயப்பன் ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெறும்.
பங்குனி உத்திரம் தினத்தில் கன்னிப்பெண்கள் சிவ விரதமான கல்யாணசுந்தரர் விரதத்தை அனுஷ்டித்து கல்யாணசுந்தர மூர்த்தியை வழிபடுவர். இதனால் திருமணங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

Sonntag, 19. März 2017

பங்குனித் திங்கள்

பங்குனித் திங்கள்
பங்குனித் திங்கள் அம்மனுக்கு உரிய விரத நாளாகும். அந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை தோறும் அம்மனை நோக்கி விரதம் இருந்து பொங்கலிட்டு வழிபட்டு அம்மன் அருள் பெறுவர். அன்றையதினம் பெண்கள் நோன்பு இருந்து அபிராமி அந்தாதி பக்திப்பாடல்களால் அபிஷேக ஆராதனைதனைகள் செய்து மறுநாள் சூரிய உதயத்துக்கு முன் பாராயணம் செய்வார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திலும், வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்திலும், ஆலயத்திலும்  இவ் விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

Donnerstag, 16. März 2017

வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்


ராகம்-ஆனந்த பைரவி   பாரதியார் பாடல்    தாளம்-சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
  வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
  கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
  ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
  கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்           (வெள்ளைத்....

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
  மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
  கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
  குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
  இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.              (வெள்ளைத்.....

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
  வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
  வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
  வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
  தரணி மீதறி வாகிய தெய்வம்.                     (வெள்ளைத்......

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
  தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
  உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
  செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
  கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்             (வெள்ளைத்....

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
  சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
  வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
  வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
  சாத்திரம் இவள் பூசனை யன்றாம்!            (வெள்ளைத்...

வீடு தோறும் கலையின் விளக்கம்,
  வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
  நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
  தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
  கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!           (வெள்ளைத்.....

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
  உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
  செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
  சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
  கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க!                   (வெள்ளைத்...

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
  நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
  ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
  மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
  புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!                        (வெள்ளைத்...

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
  இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
  ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
  பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
   ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்!              (வெள்ளைத்.....

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
  நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
  ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
  வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
  இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!               (வெள்ளைத்...