அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே ! அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ ஆதி பராசக்தி
நீயே ! இம்மாநிலத்தில் எல்லாம் .......அம்மா நடக்குதம்மா உந்தன் ஆடலினால் ! அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே ! அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ ஆதி பராசக்தி நீயே ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! குச்சியில் சுமக்காமல் கோடி லட்சம் உயிர்கள் ஈன்றாய் ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! பட்சிவாஹனனின் சோதரி சௌந்தரி ! பட்சமுடன் உன்னை பாடிடுவேன், பரிபூரணி காரணி நாரணி நீயே ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! லட்சியம் எனக்கு நீயே அம்மா, அம்மம்மா, அலட்சியம் செய்திடாதே லலிதேஸ்வரி தாயே , புவனேஸ்வரி நீயே ! கச்சி கட்டி என்னை நீ...... நீ நீ நீ நீ , கச்சி கட்டி என்னை நீ, கவலை படுத்த எண்ணினால், காத்திடுவார் யாரோ அம்மா அம்மம்மா, அம்மா அம்மா! காத்திடுவார் யாரோ, காமாட்சி மீனாட்சி நீ சாட்சி ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
பூசம்
என்பது பஞ்சாங்கம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுள் எட்டாவதாகும். தை மாதத்தில் வரும் பூசம் என்பதால் தைப்பூசம் என
வழங்கப்படுகின்றது. இந்நாளினை இந்துக்கள் புண்ணிய நாளாக போற்றுகின்றனர். தைப்பூசம்
என்கின்ற இந்நாள் பெரும்பாலும் பௌர்ணமியுடன் கூடிய நாளாக இருக்கும். தேவர்களின்
குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதை. அவர் அறிவின் தேவதையாகவும்
இருப்பதனால் தைப்பூச தினத்தில் விரதமிருந்து அவரை வணங்கினால் அருள் கிடக்கும்
என்பர். மேலும் இத் தினம் சிவசக்தி ஐக்கியத்தைக் காட்டும் திருநாள் ஆகவும்,
முருகப்பெருமானுக்கு உரிய விஷேட விழா நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. தைப்
பூசத்திருநாள் உலக சிருஷ்டியின் ஆரம்பநாள் எனவும், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவரும் காணும்படி நடராஜப்பெருமான் சிவதாண்டவம் ஆடிய நாளாகவும், வாயு, வருணன்,
அக்கினி, ஆகிய தேவர்களும் சிவபெருமானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும்
குறிப்பிடுவர். தைப்பூச தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் நீங்கிநற்பயன் கிடைக்கும் என்பர்.
தைப்பூச
நாளினை விசேட நாளாகக் கொண்டு ஏடு தொடக்கல், புதிதுண்ணல், பெண் குழந்தைகளுக்கு காது
குத்துதல், மூக்கு குத்துதல் முதலான நற் செயல்களை மேற்கொள்வார்கள்.
பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?
தை மாதம்
முதல் ஆனிமாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி செல்கின்ற காலப்பகுதி உத்தராயணம்
எனப்படும். உத்தராயணத்தின் தொடக்க நாளான தை முதலாம்திகதி அன்று தைப்பொங்கல்
கொண்டாடப்படுகின்றது. உணவு உற்பத்திக்கும், உயிரினங்கள் வாழ்விற்கும் தேவையான
வெளிச்சம், வெப்பம் என்பவற்றை சூரியன் வழங்குகின்றான். ஆதலால் நெல் அறுவடையானதும்
வீட்டு முற்றத்தில் புத்தரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து
நன்றிக்கடன் எம் முன்னோர்கள் செலுத்தி வந்தனர். இதனால் தைப்பொங்கல் திருநாள் உழவர்
திருநாள் என்றும் கூறப்படுகின்றது. தைப்பொங்கல் மறுநாள் பட்டிப் பொங்கல்
இடம்பெறும். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால் நடைகளை போற்றும் விழாவாக
இது அமைகிறது.
சைவ மக்கள்
மரபுவழி விழுமியங்களான அறம், அன்பு, அகிம்சை, நன்றி உணர்வு, பகிர்ந்து உண்ணல் ஆகிய
பண்புகளை தைப்பொங்கல் பண்டிகை மூலம் வளர்த்துக் கொள்கின்றனர்.
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக் 650 கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங் கனவினில் வந்து காரண மாக இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற் கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக் கண்ணுறக் கண்ட கனவின் காரணம் அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் ஆனை குதிரை அவைபல மடிவுற மாநகர் கேடுறும் வகையது கண்டு 660
இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர் வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப மணியும் முத்தும் வலிய கல்லாய்விட அணியிழை தன்னை அவனும் அகற்ற உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க் குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் குயக்கலம் உடைந்து கொள்ளை போக 670
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த் தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத் தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத் தூசரும் அவளைத் தூரஞ் செய்ய மாலைக் காரன் வளமனை புகலும் மாலை பாம்பாம் வகையது கண்டு ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய் சாலவும் பாவிநீ தான்யார்என்ன வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா அம்மனை அவனும் அகற்றிய பின்னர் 680
அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப அவ்வை செல்லும் அகங்கள் தோறும் வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர் அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச் 690
சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச் சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள் சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப் பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற மான்நேர் விழியாள் வருந்துதல் கண்டு தானே சென்று சாணி யெடுத்துத் தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் 700
புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி அவ்வை தானே அகமதிற் சென்று புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து வித்தக நம்பி விநாயக மூர்த்தி கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து தவநெறி பிழைத்த தையலை நோக்கி துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக் 710
கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ் செப்ப மதாகத் திருமுன் வைத்தே அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு மத்தகக் களிற்றின் மகா விரதத்தை வித்தக மாக வியங்குஇழை நோற்றுக் கற்பக நம்பி கருணை பெற்றதன்பின் சக்கர வாள சைனி யத்தோடு விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி 720
எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி இலக்கண சுந்தரி என்பவள் தன்னை அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச் செப்பிய அன்னை திருமொழிப் படியே உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும் பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் 730
அப்பசி தீர அருந்திய பின்னர் ஆனை குதிரை அவைகளும் உண்டுந்
தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே இவ்வகை சமைத்தநீ யாரென வினவ மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள் கணபதி நோன்பின் காரணங் காண்இது குணமுடை இவள்உன் குலமனை யாட்டி இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து 740