பெற்ற
தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற
தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
கண்கள்
நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இன்னும் பற்பல
நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நமச்சிவாயத்தை
நான் மறவேனே
நன்று
AntwortenLöschenநமசிவாய வாழ்க
AntwortenLöschen