தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Samstag, 26. Januar 2019

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்



பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....

கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

 

இன்னும் பற்பல நாளிருந்தாலும்

இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்

சோர்ந்து மா நரகத்துழன்றாலும்

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்

நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்

 
நமச்சிவாயத்தை நான் மறவேனே

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே



Donnerstag, 24. Januar 2019

திருவருட்பா - தெய்வமணிமாலை

தெய்வ மணிமாலை திருவருட்பா
 
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற  
  உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
  உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
  பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
  பிடியா திருக்க வேண்டும்
 
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
  மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
  வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
  தலமோங்கு கந்த வேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
  சண்முகத் தெய்வ மணியே!
                       ------- வள்ளலார் இராமலிங்க அடிகளார்
 


Dienstag, 25. Dezember 2018

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

கார்த்திகை நல்ல‌நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு
சரண‌ங்கள்  சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா
சாமி... – (தள்ளாடி தள்ளாடி.............

இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு - சாமி..
இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்தை நோக்கிக்கிட்டு
  • (தள்ளாடி தள்ளாடி......
பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
வேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்
சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்
பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
வேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
  • (தள்ளாடி தள்ளாடி......

காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு
காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு
  • (தள்ளாடி தள்ளாடி)
நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நெஞ்ச‌முருகி உன்னை நினைத்ததுமே பாத்திக்கிட்டு
  • (தள்ளாடி தள்ளாடி)
படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து
பகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு
படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து
பகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு
நெய்யிலே குளிப்பதையும் நேரிலேயே பாத்துவிட்டு
ஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு
  • (தள்ளாடி தள்ளாடி)
சாமியே சரணம் ஐயப்ப சரணம் - சாமியே சரணம் ஐயப்ப சரணம்


Donnerstag, 6. Dezember 2018

சரணம் சரணம் சரணம் சரணம்


சரணம் சரணம் சரணம் சரணம்

சரணம் ஐயப்பா – சுவாமி

சரணம் சரணம் சரணம் சரணம்

மாமலைவாசா - மாமலைவாசா

 

சரணம் சரணம் சரணம் சரணம்

சரணம் ஐயப்பா – சுவாமி

சரணம் சரணம் சரணம் சரணம்

மாமலைவாசா - மாமலைவாசா

 

தாயும் நீயே தந்தையும் நீயே

சரணம் ஐயப்பா

எங்கள் குல தெய்வமே நீ

மாமலைவாசா - மாமலைவாசா

பூதநாதா விபூதிநாதா - சரணம் ஐயப்பா

எங்களையும் காத்தருள்வாய்

மாமலைவாசா – மாமலைவாசா

  • (சரணம் சரணம்..............
     

கலியுக வரதனே நீ - சரணம் ஐயப்பா

காருண்ய ரூபனே நீ – மாமலைவாசா

காருண்ய ரூபனே நீ – மாமலைவாசா

கற்பூர யோதியே நீ – சரணம் ஐயப்பா

காந்தமலை யோதியே நீ –- மாமலைவாசா

காந்தமலை யோதியே நீ

–- மாமலைவாசா – மாமலைவாசா

  • (சரணம் சரணம்..............

 

ஏறாத மலைகள் எல்லாம் – சரணம் ஐயப்பா

எங்களையும் ஏற வைத்தாய் – சரணம் ஐயப்பா

எங்களையும் ஏற வைத்தாய் – சரணம் ஐயப்பா

பதி பதினெட்டு ஏறி வந்தோம் – சரணம் ஐயப்பா

உன் திருவடி காண வந்தோம் – மாமலைவாசா

உன் திருவடி காண வந்தோம்

– மாமலைவாசா – மாமலைவாசா

  • (சரணம் சரணம்..............

 

ஓம் ஓம் ஐயப்பா


ஓம் ஓம் ஐயப்பா

ஓம் குரு நாத ஐயப்பா

  • (ஓம் ஓம்.........….

ஹரி ஹரி சிவ சிவ ஐயப்பா

சிவ சிவ ஹரி ஹரி ஐயப்பா

சிவ சிவ ஹரி ஹரி ஐயப்பா

ஹரி ஹரி சிவ சிவ ஐயப்பா

  • (ஓம் ஓம்.............

அன்பின் அருளே ஐயப்பா

அற்புத தெய்வமே ஐயப்பா

அரிகர சுதனே ஐயப்பா

அம்மையும் அப்பனும் நீயப்பா

  • (ஓம் ஓம்.............

அழகு நிறைந்தவ ஐயப்பா

அதிசயமானாய் ஐயப்பா

அஷ்ட லக்ஷ்மியும் நீயப்பா

அனு தினம் அருள்வாய் ஐயப்பா

  • (ஓம் ஓம்.............

அபயம் அபயம் ஐயப்பா

அஞ்சலி செய்தோம் ஐயப்பா

அனாத ரட்சக ஐயப்பா

ஆபத் பாந்தவ ஐயப்பா

  • (ஓம் ஓம்.............

சத்தீய சோதி ஐயப்பா

சர்வமும் நீயே ஐயப்பா

சாஸ்தா நினதருள் ஐயப்பா

மனசாந்தியும் தருவாய்

  • (ஓம் ஓம்.............

திவ்ய தரிசனம் ஐயப்பா

தினம் தினம் அருள்வாய் ஐயப்பா

திருவடி வாழ்வே ஐயப்பா

திருவருள் தருவாய் ஐயப்பா

  • (ஓம் ஓம்.............

பம்பையின் பாலனே ஐயப்பா

பந்தள வேந்தே ஐயப்பா

சபரி கிரீசா ஐயப்பா

சாந்த சொரூபா ஐயப்பா

  • (ஓம் ஓம்.............

உமையாள் பாலா ஐயப்பா

உறுதுணை நீயே ஐயப்பா

ஊக்கம் தருபவ ஐயப்பா

ஊழ்வினை அகற்றும் ஐயப்பா

  • (ஓம் ஓம்.............

வன்புலி வாகன ஐயப்பா

வில்லாளி வீரா ஐயப்பா

எங்கும் நிறைந்தவ ஐயப்பா

எங்கள் நாயகா ஐயப்பா

  • (ஓம் ஓம்............

இருமுடியைச் சுமந்து வந்தேன்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4

இருமுடியைச் சுமந்து வந்தேன் இரக்கமில்லையா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா
- (இருமுடியைச் சுமந்து…….

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4


அழுதையிலே குளித்துவந்தேன் அறியவில்லையா
அருகேயொரு கல்லெடுத்து வைக்கவில்லையா
கரிமலையில் ஏறிவந்தேன் காணவில்லையா

கரிமலையில் ஏறிவந்தேன் காணவில்லையா - அந்த
கருடன் என்னைக் கண்டதாகச் சொல்லவில்லையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4


பம்பையிலே குளித்துவந்தேன் பார்க்கவில்லையா
பம்பா நதி போஜனம் நீர் அருந்தவில்லையா
- (பம்பையிலே குளித்துவந்தேன்…….

பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா

பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4


பதினெட்டுப் படிகள் ஏறி வரவுமில்லையா
படித்தேங்காய் உடைத்த சத்தம் கேட்கவில்லையா
- (பதினெட்டுப் படிகள் ஏறி……..

கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா

கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா - அங்கே
கூடிநின்ற பக்தர்களைப் கேட்டுப்பாரையா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4


நெய் அபிஷேகம் செய்தேன் நினைவுமில்லையா - நான்
மெய்யுருகிப் பாடியதை கேட்கவில்லையா
- (நெய் அபிஷேகம் செய்தேன்.....

ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...
ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...

அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா - நீ
அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா