தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 15. November 2020

கந்த சஷ்டிக் கவசம் – இரண்டாம்படை வீடு – திருச் செந்தூர்

 



கந்த சஷ்டிக் கவசம் – இரண்டாம்படை வீடு – திருச் செந்தூர் – திருச்சீரலைவாய்

செந்தில் மேய கந்தவேள்

தேவராஜ சுவாமிகள் அருளியது

 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் – கதித்(து) ஓங்கும்
நிட்டையுங் கைகூடும், நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசந் தனை
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவுஞ் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரிகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்து எனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் செளவும் கிளரொளி யையும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனிஒளி யொவ்வும்
குண்டலி யாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறுஇடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறுஇரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற் சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
எந்தனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று
உன் திருவடியை உறுதியென்று எண்ணும்
எந்தலை வைத்து உன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல்முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்இளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேர் இள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழூபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நல் துணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்கத் தடையறத் தாக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தோதாள் எனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்குச் செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணல் எரி
தணல்எரி தணல்எரி தணல்அது ஆக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்து ஓடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தறணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே! சையொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
அரிதிரு மருகா! அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா குகனே ! கதிர்வே லவனே !
கார்த்திகை மைந்தா ; கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே ! சங்கரன் புதல்வா !
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா !
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா !
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா !
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க, யான் உனைப்பாட
எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை
முருகனைப் பாடினேன் ஆடினேன்
பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன்
பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி அன்னமும் சொர்ணமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க, மலைக்குரு வாழ்க !
வாழ்க வாழ்க, மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளையென்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தஎன் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகிர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறுஅணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்பர் சேர்ந்தங்கு அருளுவர்
மாற்றவர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்குரு சங்காரத்தடி
அறந்தென உள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்து உண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
என்னைத்தடுத்து ஆட்கொள்ள எந்தனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேன பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இரும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலா போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓர் அரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

நன்றிகள்: Youtube Video - AGNI MEDIA - பாடியவர் >  Dr. வேல்முருகன்


Samstag, 24. Oktober 2020

மாதா பராசக்தி - நவராத்திரிப் பாடல்

 


மாதா பராசக்தி வையமெல்லம் நீ நிறைந்தாய்! 
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே! 

வேதாவின் தாயே மிகப்பணிந்து வாழ்வோமே....


வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள் 
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள் 
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்…

மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே….. 

 

 பொன்னரசி நாரணனார் தேவி  புகழ் அரசி 
மின்னும் நவரத்தினம்போல் மேனி யழகுடையாள் 
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி 

தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே 


மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள்பாதம்

தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

பாரதியார் பாடல்

சுதா இரகுநாதன் குரலில்

நன்றிகள் :  Amutham Music 

 


Freitag, 23. Oktober 2020

சரஸ்வதியே சரஸ்வதியே



சரஸ்வதியே சரஸ்வதியே

சகலகலாவல்லி சரஸ்வதியே

நவராத்திரி கடைசி நாள் மூன்று

நாமகள் உனக்கே உகந்ததென்று

அவனியேதொழுதிடும் அன்னைஎன்று

அம்மா உன்னையே போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

ஆசன மலரோ வெண்மை நிறம்

அம்ச வாகனமும் வெள்ளை நிறம்

பூசனை மலர்கள் வெண்தாமரை

பூரணி உன்னையே போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

 

ஜெபித்திடும் மாலை வெள்ளை நிறம்

ஜெகஜெனனி உள்ளம் பிள்ளை மனம்

தவ முனிவோர்கள் தாங்கும் பதம்

தாரணி உன்னையே போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

கலைகளை வழங்கிடும் மலர் மாது

கலைக்கொடி ஞான பெருமாட்டி

விலையில்லா வித்தியா பனுவலாட்சி

வேணியே உன்னை போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

ஞானங்களை தரும் ஞானாம்பாள்

நற்கலை செல்வி வித்தியம்பாள்

மோனம் செய்வாள் மலர்மேலே

சரஸ்வதியே உன்னை போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

முப்பெரும் தேவியில் நடுப்பாகம்

முதல்வி உன்னக்கொரு நமஸ்காரம்

கற்பதும் கேட்பதும் உன்னாலே

கலைமகளே உன்னை போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

                            பாடியவர்: jeyasri 

                          எழுதியவர் : Lenka

நன்றி : kala Vasanthan

 

 

 

 


Freitag, 21. August 2020

பிள்ளையார் சதுர்த்தி

 

விநாயக சதுர்த்தி என்பது விநாயகப்பெருமானின் முக்கியமான விழாவாகும்.

 

  விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகரை வழிபாடு செய்தபின்னே எப் பணியையும் செய்வதென்பது சைவசமயத்தவரின் மரபாகும்.இது சிவன் மகனுக்கு கொடுத்த கொடையாக கருதப்படுகின்றது. அந்த வகையில் நாம் நம்பிக்கை வைத்து தும்பிக்கையானை முதலில் வழிபாடு செய்கின்றோம். 

 

ஆவணி சதுர்த்தி கொண்டாடுவதற்கு வேறு கதையும் கூறுவார்கள்.

 

ஒருமுறை விநாயகப் பெருமான் கைலை மலையில் நடனம் ஆடினார்.அதனை சந்திரன் பார்த்து சிரிக்க விநாயகப் பெருமானுக்கு கோபம் வந்தது.அதனால் சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.பெரியோர் முன்னிலையில் என்னைப் பார்த்து சிரித்து பரிகாசம் செய்த உனது ஒளி உலகில் பரவாது இருக்க கடவது என சபித்தார்.அதற்கு சாபநீக்கம் வேண்டும் என எல்லோரும் வேண்டியதால் விநாயகர் ஆவணி சதுர்த்தி அன்று சந்திரனைப் பாராமல் தம்மை சிறப்பாக பூஜிப்பவர்கள் தம் அருளை பூரணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.மற்றைய தினங்களில் சந்திரனின் ஒளியை எல்லோரும் அனுபவிக்கலாம் என கூறி அருளினார்.

 

 அல்லல் போம் வல்வினை போம் 

அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்

போகத் துயரம் போம்  - நல்ல 

குணமதிகமாம் அருணைக் போபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்

கணபதியைக் கைதொழுதக் கால்.


சீதக் களபச் செந்தா மரைப்பூம்

 பாதச் சிலம்பு பலவிசை பாடப்

 பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

 வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

 பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

 வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

 அஞ்சு கரமும் அங்குச பாசமும்

 நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!


மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா! 
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே 
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும் 
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே! 

  நாமும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வோம்!வரசித்தி அருளைப் பெறுவோம்! 

சைவனாக வாழ்வோம்!

சைவனாக வளர்வோம்!

 

 

 

Dienstag, 26. Mai 2020

கடவுள் தந்த அழகிய வாழ்வு


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…...
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு.....
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்கையை

அன்பில்... வாழ்ந்து... விடைப்பெறுவோம்....

        (கடவுள் தந்த அழகிய வாழ்வு..............


பூமியில்... பூமியில்.. ..

இன்பங்கள் என்றும் குறையாது.....
வாழ்க்கையில்...... வாழ்க்கையில்……

எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஓ..

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம்.... இந்த பரவசம்.....
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே.....
        (கடவுள் தந்த அழகிய வாழ்வு..............

நாமெல்லாம்.... சுவாசிக்க....
தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்….. மேகங்கள்.....
இடங்களைப் பார்த்து பொழியாது…
கோடையில் இன்று இலையுதிரும் ….
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்.....
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொல்லும்

பாடங்கள் தானே...... கேளடி
        (கடவுள் தந்த அழகிய வாழ்வு..............




 


Freitag, 8. Mai 2020

என்ன வரம் கேட்பேன் நானே


என்ன வரம் கேட்பேன் நானே

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே

என்ன வரம் கேட்பேன் நானே - என்

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே

 

புகழை நான் வேண்டவா  பொருளை நான் வேண்டவா

நல்ல பண்பை நான் வேண்டவா

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே

என்ன வரம் கேட்பேன் நானே

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே...!

 

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகனும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியனும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கனும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டனும்

மனிதனாகப் பிறந்து விட்டேன்  எப்படி நான் வாழனும் ஆ.....

மனிதனாகப் பிறந்து விட்டேன்  எப்படி நான் வாழனும்

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கனும்

மதங்கள் எனும் மலைகள், ஜாதி எனும் தடைகள் கடந்திட

 ஐயன் உன் அருளினை நான் பெறவே

                                                                              (என்ன வரம், வேறென்ன வரம் ...

 

 பறவையாக நான் பிறந்தால் கருடனாக ஆகனும்

 திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகனும்

 மலராக நான் பிறந்தால் கமலமாகப் பூக்கனும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டனும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடனும் ஆ.....

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடனும்

பேரசை என்றபோதும் ஐயன் நிறைவேற்றனும்

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணம்

                                                             (என்ன வரம், வேறென்ன வரம் ...