தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Samstag, 30. Juni 2018

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

சத்தியம், சிவம், சுந்தரம் ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம் ம் ம் ம்...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
(அழகன் முருகனிடம்)
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
(அண்ணல் உறவுக்கென்றே)
ஆ………… ஆ……..
(
அழகன் முருகனிடம்)

பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே, (2)
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான் (2)
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை(2)
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ………… ஆ……..
(
அழகன் முருகனிடம்)

மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ (2)
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ (2)
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்(2)
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ….. ஆ……
(
அழகன் முருகனிடம்)


Donnerstag, 31. Mai 2018

கை கொட்டி சிரிப்பார்கள்



கை கொட்டி சிரிப்பார்கள்
ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டு கல்யாணமே தரும்
விபரீத உறவாகுமே!
தலை மாறி கால் மாறுமே அங்கு
சொந்தங்கள் தடுமாறுமே!
 
வீணை தன் நரம்பை
விரல் மீட்டும் போது
மிருதங்க ஒலி தோன்றுமா?
விளக்கேற்றி எடுத்து
பகல் நேரம் வைத்தால்
இழைகின்ற ஒளி தோன்றுமா?
 
கறக்கின்ற பாலை
சுரக்கின்ற மடிக்குள்
அனுப்புதல் நடக்காதம்மா
பிறக்கின்ற ஆசை
தவறாக இருந்தால்
நடக்கவும் கூடதம்மா
 
விளையாட்டு கல்யாணமே தரும்
விபரீத உறவாகுமே!
தலை மாறி கால் மாறுமே அங்கு
சொந்தங்கள் தடுமாறுமே!
கை கொட்டி சிரிப்பார்கள்
ஊரார் சிரிப்பார்கள்
 


Donnerstag, 24. Mai 2018

வைகாசி விசாகம்




வைகாசி விசாகம்
ஆண்டு தோறும் வைகாசி மாதம் பௌர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திர தினத்தை, தமிழர்கள் தமிழ்கடவுள் முருகனின் பிறந்தநாளாக கொண்டடுவார்கள்.
நல்லோரைக் காத்து எல்லோருக்கும் இகபர சுகம் கொடுத்து ஈற்றில் பிறவிப்பிணியை நீக்க முருகப்பெருமான் உதித்த திருநாள் வைகாசி விசாகம் ஆகும். சிவனின் ஐம்பொறிகளில் இருந்து  ஐந்து ஒளிப்பிளம்புகளும், மனத்தில் இருந்து மற்றொரு ஒளிப்பிளம்புமாக ஆறு ஒளிப்பிளம்புகள் சரவணப்பொய்கையில் வீழ்ந்தன. அவை ஆறு குழந்தைகளாக மாறின. அக்குழந்தைகளை ஆறு கார்த்திகைப்பெண்கள் வளர்த்தனர். அவர்களைப் பார்ப்பதற்கு சிவபெருமான் உமாதேவியருடன் அங்கு எழுந்தருளினர். அக்குழந்தைகளை உமாதேவியார் ஒன்றிணைத்து அணைத்தபோது ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்ட முருகப்பெருமான் தோன்றினர்.
 
“அருவமும் உருவும் ஆகி  அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்ப
தோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
 கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்து ஆங்கு
 உதித்தனன் உலகம் உய்ய.”
 
வைகாசி விசாக தினத்தில் முருகன் உதித்ததால், முருகப்பெருமான் விசாகன் எனவும் அழைக்கப்படுகின்றார். முருகன் பிறந்த இப்புண்ணிய தினத்தில் சிறப்பாக முருகன் ஆலயங்களிலும், பொதுவாக மற்றைய  ஆலயங்களிலும் விசேட அபிஷேக பூஜை வழிபாடுகளும், விரத அனுட்டானங்களும் நடைபெறுகின்றன. எனவே முருகப்பெருமான் சக்தியை உணர்ந்து,  அவர் உதித்த இத்திருநாளகிய வைகாசி விசாக தினத்தில் முருகப்பெருமானை வணங்கி நல்லருள் பெறுவோம்.
 ஓம் சரவண பவ
 


Samstag, 17. Februar 2018

யாழ் - சிவயநம சிவசங்கரா



சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...
 வாள் கண்டு சாயாத
தலையெங்கள்
தலையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
 வேல் கண்டு சாயாத
படையெங்கள்
படையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
 "குளப்பு வழி அன்ன 
கவடுபடு பத்தல்
விளக்கு அழல் உருவின் 
விசிஉறு பச்சை
எய்யா இளஞ்சூற் 
செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவாழ் அலவன் கண் கண்டு
அளைவாழ் அலவன் கண் கண்டு"
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்..
 யாழ் கண்டு நாமிங்கு
நாள் கண்டு
கோள் கண்டு
வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா..
உள் கண்டு வெளிகண்டு
உள்ளுக்கும்
உள்கண்டு
உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா..
 மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்
 "துளைவாய் தூர்ந்த
துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண் நா இல்லா அமைவரு வறுவாய்
பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின்
ஆய்திணை யரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்"
மேல் அந்து போனாலும்
தோல் வெந்து போனாலும்
சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா..
நாள் வந்த பின்னந்த
நாள் வந்த பின்னெங்கள்
யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா..
"கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை"
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்
தீ என்று சொன்னாலும்
தீபங்கள் என்றாலும்
தீ என்பதொன்றுதான் சிவசங்கரா..
நான் என்று சொன்னாலும்
நீ என்று சொன்னாலும்
நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா..
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...


Mittwoch, 14. Februar 2018

நடராஜப் பத்து



நடராஜப் பத்து
 
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழு நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே !
 

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
 

கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபயனுமடைந்திலேனை
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாவரம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை இவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
இருப்பதுனக்கழகாகுமா?
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

வம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேசம்
அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு
மந்திரமல்லஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம்
கூறிடும் வயித்தியமல்ல
என்மனம் உன்னடிவிட்டு விலகாது
நிலைநிற்கவே உளது கூறி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே!
 
 
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ!
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்
பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்ப்பவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ
பாலகனைக் காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
 

அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ
அறிவிலாததற்கழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக்கழுவனோ
முற்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ
என் மூட அறிவுக்கழுவனோ
முன்னில் என் வினைவந்து மூளும் என்றழுவனோ
முத்தி வருமென்று உணர்வனோ
தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென்ன என்றழுவனோ
தையலார்க்கழுவனோ மெய்வளர்க்க அழுவனோ
தரித்திர தசைக்கழுவனோ
இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ
எல்லாமுரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ
கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ
கிளைவழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ
தந்தபொருளிலை யென்றனோ
தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ
தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வாணரைப் பழித்திட்டனோ
வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ
ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ
எல்லாமும் பொறுத்தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
 

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
தாரணியையாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!
 இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்
உந்தனிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
கண்பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ
இரும்போ பெரும்பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ
இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுஎன்ன கோபமோ
இதுவே உன்செய்கை தானோ
இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனோ
உனையடுத்துங் கெடுவனோ
ஓஹோ இது உன்குற்றம் என்குற்றம்
ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்
இனியருள் அளிக்க நினைவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
 
சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியன் இவரை
சற்றெனக் குள்ளாக்கி ராசி பன்னிரண்டையும்
சமமாய் நிறுத்தி யுடனே
பனியொத்த நட்சத் திரங்களிரு பத்தேழும்
பக்குவப் படுத்திப் பின்னால்
பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும்  வெட்டிப்
பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையும் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின்
தொண்டர்கள் தொழும்ப னாக்கி
சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும்
எமை அருள்வது இனி யுன்கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே.